தந்தனன தனதான தந்தனன தனதான
தந்தனன தனதான ..... தனதான
மண்பரவு முயிர்யாதும் விண்ணுரையு மமரோரும்
துன்பமிக வுறுமாறு கொடிதான
மன்னலுற முடியாத வஞ்சினமு மிகவான
செய்துறையு மவுணோரும் பொடியாக
கண்ணனலி னருளோடு திங்களணி யிறையோனும்
தந்தருளிக் கயலாடு நிலையோடு
கண்டதொரு மலர்போல செங்குவளை முகமாறு
கொண்டசிறு சுனைதோன்று மிளையோனே|
தண்திரையற் தனலாகத் திண்மணலும் அனலாகத்
தென்வளியும் தணியாத புயலாகத்
தொன்வெளியுங் கனலாகத் தங்கநிற முகமாறும்
செஞ்சுடரின் நிறமாகிச் சினமேகி
வண்டுமுரல் மலர்மார்பு வந்தணையு மொளிவீசு
வல்லயிலை விரைவோடு வரையேவி
வந்தமரர் சிறைமீள வல்லவுணர் கிளைவீழ
செந்தினகர் நிலையான பெருமாளே!
No comments:
Post a Comment