காத லென்றோ ருணர்வி லுறுவோர்
காத லென்பது யாதென வுரைத்தும்
காத லென்பதி யாது யாதென
ஏது முணர்வி லறியா திருந்தேன்!
காத லென்றே வந்ததோர் அரிவையொடு
ஓத லென்பதி யாது மின்றித்
தாயை யறியுஞ் சிறுபார்ப் பன்ன
மாயை கண்டது போலே
ஆய உணர்ந்த வெஞ்சிறு நெஞ்சே!
(பாவகை: நேரிசை ஆசிரியப்பா)
காதல் - அதை
மோதல் செய்தோர் பலர்
யாதென உரைத்தும்
காதல் யாதென என்னறிவுக்குப் புலப்படவில்லை..!
பெண்ணே! நீ வந்தபின்னே -
தாயைச் சிறு கன்று தானாய் அறிவது போல்
பாயும் காதல் அதை அறிந்தேன்,
மாயம் போல்.. யாரும் சொல்லித் தராமலேயே!
No comments:
Post a Comment