Friday, October 24, 2014

தமிழொடு மேவு பெருமாளே!

தனதன தான தனதன தான
        தனதன தான ..... தனதான


அணியுடை ஆறு முகமொளி வீச
        அகன்றிடு மார்பில் அழகான
அருமலரோடு தழுவிடு வேலும்
        அமர்கரம் ஆடு மயிலோடு

மணியுடை தாளும் அடிகமழ் போதும்
        அருள்தர நாளு மகிழ்வோடு
மதிமுகம் காணின் விழியுற நானும்
        பொருளது வேறு விழைவேனோ!

பணியென நாளு முனைமற வாத
        பலரொடு பாதம் நினையோரும்
பெரும் பொருளோடு வளர் அறிவோடும்
        மகிழ்வொடு வாழ அருள்வோனே!

தணிமலை மீது அவுணரை வீழ்த்த
        அனலது தீர அழகாக
தளிரென வாழு குறமக ளோடு
        தமிழொடு மேவு பெருமாளே!

No comments:

Post a Comment