Saturday, June 1, 2013

பொய்பகர் கண்கள்

கண்பட் டவரொடு கனலுமிழ் விழிகள்
கண்டவர் காதலும் பகராது சென்றபின்
கண்படு காடிகை காரார்ந் தனவே!
கண்ணே பொய்பகர் கண்ணே!
பண்படு நெஞ்சொடு மெய்பயி லாமோ?
(பாவகை: நேரிசை ஆசிரியப்பா)


அவர்பால்,
அனல் உமிழ்ந்தன
என் கண்கள்!

காதல் பகராது
கடந்து அவர் சென்றபின் - என்
கார்மேகக் கண்மை
கடும் மழை பொழிவதேனோ?

உண்மையை உள்வைக்கும் நெஞ்சே!
கண்ணிமைக்கும் கற்பித்துத் தருவாயோ?
காதலில் மெய்பகர ..

No comments:

Post a Comment