Wednesday, February 6, 2013

மயிலுடை இனியோனே!


தனன தனதன தனதன தனதன
    தனன தனதன தனதன தனதன
        தனன தனதன தனதன தனதன தனதான


விழியு பிரிதுண ரழகிய உலகமு
    வதியு மிருசெவி யுறுமரு இசைகளு
        மதியு மறிகிற தொடுசுவை மணமெனும் புலன்யாவும்

பதியு மறிகெடு முதுகிழ வயதுறும்
    விதியி னழலினை யறிவொடு விலகியுன்
        மதியி னறுமுக முனதரு கழலினை யடைவேனோ!

கழையின் துளைதொடு குழலெழு மிசைதனில்
    கனிய விழியவர் மயலொடு அசைவறக்
        கடவு மரியவ னெடியவன் தருபுகழ் மருகோனே!

கதிரி னொளிமிக வெளியிடும் அயிலொடு
    கதறு சிறைபடு மமரரும் விடுபடக்
        கடிது அவர்படு துயரமும் பொடிபட அருளாலே

சுழலு திரைதழு விடுகட லதனொடு
    சொலரு நகருடை யவுணரை யடியொடு
        சிதைய வருளொரு சினமுடை யறுமுக முடையோனே!

செறிவு முகைதொடு மடலையர் அறுவரும்
    சினைய கயலுறை யுகுவளை மலரெழு
        சுடரை சுடலுறை யிறைவனின் மகவினை யணைவாக

மழலை முழுதுற முகமெழு மெழிலுற
    மலரு மரைவிழி யொடுதமி ழுறவளர்
       மிளிரு மழகிய மரகத மயிலுடை யினியோனே!

மருளு மிருவிழி மகிழ்குற மடலொடு
    மனையு மெனவரு மமரரின் மகளொடு
        முரலு மளினிறை முதிர்பழ மலையமர் பெருமாளே!

No comments:

Post a Comment