Tuesday, April 24, 2012

புலால்

புலாஅல் புசித்தாய் புறம்படல் உடைத்தே
செலாது வந்த கேடது கழிய
உலாவு நீரின் தலைத்தாள் நனைக்க
நிலாது செல்லென உரைத்தனை! செய்தும்
விலாவின் ஊடே பாய்ந்த ஊன்தனில்
அளாவி ஆங்கே கலந்த
புலாலும் உண்டே யானென் செய்வேன்!
(பாவகை: நேரிசை ஆசிரியப்பா)

புலால் உண்டதால் உள்ளே வரற்கியலாது, தலையோடு நீராடி வா எனச் சொன்னாய். நீராடி வந்தபின்னும், என் தசைகளில் நானுண்ட புலால் கலந்துள்ளதே! அதை நான் என்ன செய்வேன்?

No comments:

Post a Comment