Sunday, June 27, 2010

மழை இல்லாப் புலம்!

காதல் என்பது எங்ஙனம் இனிது?
அருள்வழி மயங்கிய பேதை எந்தன்
மருள்விழி மருங்கில் மழைவரக் கண்டும்
புலம்பல் புறந்து போவேன் என்னும்
இறுகிய நெஞ்சின் இனத்தவர் கொள்ளும்
காதல் இனிதோ சொல்லவர்
போதல் காணும் மழையில் புலமே!
(பாவகை: நேரிசை ஆசிரியப்பா)


தலைவனைப் பிரிந்த தலைவி கூறுகிறாள்: இறுகிய உள்ளம் கொண்ட அவர் கொள்ளும் காதல் எங்ஙனம் இனிது? என் கண்ணின் நீர்ப்பெருக்கையும் பொருட்படுத்தாது எனை அவர் விட்டுச் செல்லுதலைக் காணும் மழை காணாத நிலமே! சொல்வாயாக! காதல் இனிதோ?

2 comments:

  1. :) அருமை(புரிந்ததால் ;))

    பி.கு: முந்தைய மறுமொழியில் பிழை.. பொறுத்திடுக..

    ReplyDelete