எல்லும் நிலாவும் வீசும் ஒளியின்
புல்லும் நெல்லும் தளிர்த்தே எனினும்
பலரூண் புசிக்கப் பயன்தரு நெல்லே!
அச்சிறு நெல்லின் வளர்கதிர் ஏய்ப்ப
அவனியின் அற்றோர் பயன்பெற ஓங்கலும்
வாங்கிய நெற்கதிர் வளைதல் போல
ஓங்கிய பொழுதின் பணிதலும்
பெரியோர் ஏத்தும் நல்லரும் பண்பே!
கதிரும் நிலவும் வீசிய ஒளியில், புல்லும் தளிர்த்தது. நெல்லும் தளிர்த்தது. எனினும், நெல்லானது, பலருக்கும் பயன்தரும் வகையில், புசிக்க உணவினைத் தந்தது. அந்நெல்லின் கதிரானது, பிறர் பயனுற வளர்தல் போல, இப்பாரில், இல்லாத மக்கள் பயன் பெறுமாறு வளர்தலும், அங்ஙனம் வளர்ந்தபின் பணிவுடன் இருத்தலும் அரும் பண்புகளாம்.
புல்லும் நெல்லும் தளிர்த்தே எனினும்
பலரூண் புசிக்கப் பயன்தரு நெல்லே!
அச்சிறு நெல்லின் வளர்கதிர் ஏய்ப்ப
அவனியின் அற்றோர் பயன்பெற ஓங்கலும்
வாங்கிய நெற்கதிர் வளைதல் போல
ஓங்கிய பொழுதின் பணிதலும்
பெரியோர் ஏத்தும் நல்லரும் பண்பே!
(பாவகை: நேரிசை ஆசிரியப்பா)
கதிரும் நிலவும் வீசிய ஒளியில், புல்லும் தளிர்த்தது. நெல்லும் தளிர்த்தது. எனினும், நெல்லானது, பலருக்கும் பயன்தரும் வகையில், புசிக்க உணவினைத் தந்தது. அந்நெல்லின் கதிரானது, பிறர் பயனுற வளர்தல் போல, இப்பாரில், இல்லாத மக்கள் பயன் பெறுமாறு வளர்தலும், அங்ஙனம் வளர்ந்தபின் பணிவுடன் இருத்தலும் அரும் பண்புகளாம்.
i am not that great in tamil..
ReplyDeletebut would it be great if it had been "nilavum" instead of "nilaavum" in first line?
:) ethuku ithu ippo?
ReplyDelete@sriram - that was intentional. It's like adding a red tinge in a mild blue painting :)
ReplyDeleteawesome:)
ReplyDelete