Thursday, September 30, 2010

கானல் காணும் நெஞ்சு

நிலைப்பது யாதெனின் யாங்கணும் உண்டோ?
கலைந்தது கலைந்தே நிலைத்தலும் உண்டே
கண்வழிக் காணும் நெஞ்சும் உண்டே
கலைந்ததைக் காணல் யாங்கணும் உண்டோ?
கலைந்தே நிலைத்தலின் பயனும் உண்டோ?
காணல் கண்களின் பயனே எனினும்
கானலைக் காணும் நெஞ்சே
கலைதலைக் காணலும் கண்களின் வழியே!
(பாவகை: நேரிசை ஆசிரியப்பா)


நிலைப்பது யாதெனின், கலைவது கலைந்தே நிலைத்தலே ஆகும். நெஞ்சம் கண்வழியே காண்கிறது. கண்களால் கலைந்ததைக் காணுதல் இயலாது. எனவே, கலைவது கலைந்தே நிலைத்தலில் நெஞ்சத்திற்குப் பயன் ஏதும் உண்டோ? ஆதலின், கானலின் அழகைக் காணும் நெஞ்சே. அது கலைவதையும் கண்களால் நீ கண்டாதல் வேண்டும்!

No comments:

Post a Comment