Wednesday, May 4, 2011

மாற்றம்

ஆண்டுகள் புதிதென விரிந்தாலும்
சுற்றமும் நட்பும் பிரிந்தாலும்
எனக்கென எனக்குள் ஒன்றுண்டு!

நானும் நாணலும் ஒன்றாவோம் ..
வெள்ளமோ நெஞ்சமோ -
அதன் போக்கில் வளைந்து கொடுப்போம் நாங்கள்.

நாணல் -
வளைந்து கொடுத்தாலும்,
கலைந்து செல்வதில்லை.

நானோ,
வளைந்தும் கொடுப்பேன்
கலைந்தும் செல்வேன்.

மாற்றம் மட்டுமே நிலைப்பதனால்
நானும் நிலைக்கும் பொருளன்றோ?
நிதமும் மாறிச் செல்வதனால்
நிலைத்தல் என்பது முரணன்றோ?

எனக்கென எனக்குள் இருப்பதையும்
என்னை மாற்றி மறுப்பதையும்,
மாற்றம் என்றால் முரணன்றோ?
மாற்றம் மட்டுமே நானன்றோ!

No comments:

Post a Comment