கடல்நடுவில் கலம்நழுவிக்
கீழ்வீழ்ந்த குருடன்
உடல்நடுங்கக் கதறிக் குரைத்து ஆர்ப்பரித்துத்
தன் கைகால் வலிமையினால் நீந்துகிறான்!
அவன் அறியவில்லை -
கரை எங்குள்ளதென்று!
ஆர்ப்பரித்த அவன் நெஞ்சம்
சட்டென்று ஏதோ ஒரு நொடியில்,
தெளிவு கொள்கிறது,
மழைவிட்டோய்ந்த வானத்தைப் போல.
அவன் உள்ளம் கொண்டது
'நம்பிக்கை'
எங்கோ பக்கத்தில் தான் கரை உள்ளதென்று!
இதை எழுதத் தூண்டியதெது? 'நம்பிக்கை' என்னும் பதிலை எதிர்பார்க்கவில்லை.. தெளிவு பிறப்பதன் முன்னர் நம்பிக்கை பிறக்கும் என்று நான் எண்ணுகிறேன்.. நம்பிக்கை இன்றி இருப்பதன் நிலை தான் தெளிவின்மை என்றறிகிறேன்.. நீரோடைக்கு நம்பிக்கை தேவை இல்லை, அது கடல் சென்று சேர.. அது இயற்கையோடியைந்தது.. சென்றடையும்..
ReplyDeleteதெளிவு பிறக்கும் அவ்வொரு நொடியின் நுட்பத்தைக் கொஞ்சம் விளக்கலாமே??..
ReplyDeleteதமிழைத் தரிசிக்கிறேன் தங்களது தளத்தில்... நெஞ்சார்ந்த நன்றி!
ReplyDelete