Monday, June 8, 2009

வாயில் தேறாள் கிழத்தி!

காதலன் ஊழ்வழி மாண்டனன் ஆதலால்
மூத்தோ ருரைத்த வாய்ச்சொற் கேட்டு
முடங்கிய வேளிர் இல்லக் கிழத்தி
இடையிட் டூட்டி யீன்ற வளவன்
மடக்கொடி கைத்தரு மணநல் வேளை
கடைஇல் வாயிற் தேறாள்
வென்றான் உவகை ஒப்பது வாக.
(பாவகை: நேரிசை ஆசிரியப்பா)


வேளிர் இல்லக் கிழத்தி, தன் கணவன் மாண்டதால், பெரியோர் சொற்படி, தன் மனையினுள்ளேயே முடங்குகிறாள். இவ்வாறு இருப்பவள், தான் இடையில் வைத்து ஊட்டி வளர்த்த மகன், மடமுடைய கொடிபோன்ற அழகிய பெண்ணைக் கைப் பிடிக்கும் நல்லவேளையிலும், இல்லத்தின் பின்பக்க வாயிலைக்கூடத் தாண்டாமல் தங்குகிறாள். இவ்வாறு இருப்பதிலும் எதையோ பெற்றதைப் போன்றதொரு மகிழ்ச்சியடைகிறாள்.

No comments:

Post a Comment