சுழல் மயிரும் பொழில் முகமும்
தழல் உமிழும் மழை விழியும்
எழில் கரமும் கழல் அடியும்
எழும் துயரை விழல் உறுமே!
கழல் தொழுது எழும் அடியார்
நிழல் நிலவும் வழி நிலனும்
விழைவுடனே நினைத்திடவே
அழல் வேலும் அருள் தருமே!
அமிழ்துடைய இதழ் பகரும்
அழகுடைய மொழி யுடனே
அருளடியார் உனைப்பாடத்
தமிழ் காக்குந் தலைவோனே!
வெயில் நிழலும் உனை நினைக்க
மயில் அழகு துணை இருக்க
அயல் அகத்தில் இருப் பினினும்
மயல் பொழுதுங் காப் புகுமே!
திணை யளவும் நினைப்பதற்கு
வினை யளவின் மறந்திடினுந்
துணை யிருப்பாய் மால் மருகா!
எனைக் காப்பாய் வேல் முருகா!
No comments:
Post a Comment