tag:blogger.com,1999:blog-75237042035266365002023-11-15T09:11:52.646-08:00நெய்யுடைஅடிசில்Siddaarthhttp://www.blogger.com/profile/09489361679848572319noreply@blogger.comBlogger38125tag:blogger.com,1999:blog-7523704203526636500.post-56175723190062884012017-01-22T00:26:00.000-08:002017-01-22T00:26:15.315-08:00தமிழினம் செய்யும் இளையோர் நாங்கள்!
அறந்தரு அரசர் அளவிலோர் அன்றே
புறங்கெடு அவுணன் ஒருவன் மாள
நெறியொடு செவ்வேள் அயில்கொளல் ஆனோய்!
அடியொடு அறங்கெடு வஞ்ச ரின்றோ
முடியொடு காசு ஆக்குதல் தேடிக்
குடியடி நாடி யாள்வோ ரானார்!
வையகம் ஆள அன்று
அரசர்தாம் ஆயிரம்பேர்!
ஆயினும் முருகா! உந்தன்
கையிலே வேலை ஏந்திக்
கொய்யவோர் அசுரன் தானே!
ஐயகோ! இன்றோ இங்கு
மையலில் மக்கள் என்று
மக்களின் கால்பிடித்துப்
பையிலே பணம் பதுக்கிப்
பார்க்கும் பல்லாயிரம் பேர்
பாசமாய் ஆள வந்தார்!
வஞ்சித் துறுதி தருமொழி தந்து
நெஞ்சுறு தீங்கின் முறையாற் குடிதனை
அஞ்சுதல் பெருகப் பிரித்த லாற்றி
மிஞ்சக் கொடிகொள் ஆட்சி யென்பகர்
மஞ்சத் துறைவோர் அளவில ராமே!
நெஞ்சிலே வஞ்சம் வைத்து
எங்களை அஞ்சவைத்துச்
சாதிகள் சண்டை தந்து
கட்சிகள் கொடிகள் கொண்டு
சத்தியம் கோடி சொல்லித்
தலைவராய் வந்தீர் நீங்கள்
திருடர் தாம் ஆயிரம்பேர்!
அயலவ ரீசிறு செல்வம் பணிந்து
இயன்றிடு வலியா லெம்மைப் பணித்தீர்|
அந்நியன் அடிமை செய்தான்
உங்களைப் பணத்தை வைத்து!
எங்களை அடிமை செய்தான்
உங்களின் பலத்தை வைத்து!
அயலகத் துதித்த கேடின் கள்வோர்
வயலகத் தோடு ஏறு கவர்ந்ததன்
மார்பிளந் தூணின் வாணிகஞ் செய்து
ஏர்பிடித் தோடப் பொறிபல தந்து
தூர்செய் எருப்பல சேர்த்து விற்றெம்
ஊர்நிரைப் பசும்பால் நஞ்சாய் மாற்றிப்
பேர்முறை யறியா நோய்தந் தெமது
கார்தரு செல்வம் யாங்கவர்ந் தனரே|
வெளிநாட்டின் நாதியற்ற
கார்ப்பரேட் கள்வர்களே
எங்களின் முதுகெழும்பாம்
உழவுதன் ஆணி வேராம்
காளையைக் கவர்ந்து சென்றீர்!
கறியாக்கிக் காசு கண்டீர்!
இயந்திரம் கொண்டு வந்தீர்!
செயற்கையாய் உரமும் விற்றீர்!
பாலிலே நஞ்சு வைத்தீர்!
நோயிலும் வணிகம் செய்தீர்!
தமிழ்தரு நாட்டின் தகைமைக் கெஞ்சிய
திமிலுடை யேற்றின் திடல்விளை யாடித்
திறங்காண் காளையர் தோள்தேர் வஞ்சியர்
திகழ்நகை மழலையர் தான்கொண் டாடிய
களிதடுத் துறைவீர்! கொல்லேற்றுக் கோடே
கொலைதர வெறினும் வாள்கொடு கொல்லோம்
களம்புகு காளை தழுவிடு மரபோம்!
எஞ்சிய காளையோடு
கொஞ்சிய காளையர்தம்
உரிமையைக் கொல்லப் பார்த்தீர்!
பிஞ்சுகள் பெண்கள் கொண்ட
பாசத்தைப் பறிக்கப் பார்த்தீர்|
திமிலுடை ஏறுதன்னைக்
கொல்வெறி கொண்டதெனினும்
கல்துளைக் கத்தி கொண்டு
கொல்வதெம் வீரமல்ல!
திறனுடன் கட்டித் தழுவிக்
கொள்வதே எங்கள் பண்பு!
அடக்கல் செய்தீர் அகந்தைக் கடங்கோம்
கடல்போல் வந்தே கடந்து வென்றே
முடைதனை யீண்டொ ருமுறை யடுத்தோம்
தடையினி தரினும் தடந்தோள் துவளோம்!
திமிறுடன் அடக்க வந்தாய்
தமிழன்தன் தகைமை கண்டாய்!
பொறுத்தது போதும் என்று
பொங்கினோம் கண்டாய் இன்று!
ஒருமுறை பார்த்துவிட்டோம்!
ஒடுக்குதல் கண்டுவிட்டால்
இனிவரும் காலமெல்லாம்
பலமுறை பாய்ந்து வருவோம்!
மறமு மன்பு விரைவுங் கொண்டோம்
அறமு மருளு மாற்று மிளையோம்
அரசு ஆவீர் அயலீர் காணீர்
விரிச லின்றி வாகை கொண்டே
முரசு மீட்டி அச்சந் தந்தோம்
ஒருசிறு தொடக்க மீண்டு கண்டீர்
அரும்பல புதுமை செய்வோம்
அரும்புகழ் கொள்பெரு தமிழினஞ் செய்தே!
(பாவகை: நேரிசை ஆசிரியப்பா)
ஈரமும் இரக்கம் கொண்டு
வீரமும் வேகம் உண்டு
மாண்புகள் கோடியுண்டு
மாணவர் இளைஞர் நாங்கள்!
அரசியல் செய்ய வந்தோர்
அந்நியர் நன்கு கேளீர் -
இன்றுதான் தொடக்கம் தந்தோம்!
வென்றுதான் அச்சம் தந்தோம்!
என்றுமே புதுமை செய்யும்
ஒன்றிய இனம் படைப்போம்!
Siddaarthhttp://www.blogger.com/profile/09489361679848572319noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7523704203526636500.post-66625604446875585062016-06-26T00:16:00.001-07:002022-02-05T13:33:38.951-08:00காதல் உணர் நெஞ்சு!
காத லென்றோ ருணர்வி லுறுவோர்
காத லென்பது யாதென வுரைத்தும்
காத லென்பதி யாது யாதென
ஏது முணர்வி லறியா திருந்தேன்!
காத லென்றே வந்ததோர் அரிவையொடு
ஓத லென்பதி யாது மின்றித்
தாயை யறியுஞ் சிறுபார்ப் பன்ன
மாயை கண்டது போலே
ஆய உணர்ந்த வெஞ்சிறு நெஞ்சே!
(பாவகை: நேரிசை ஆசிரியப்பா)
காதல் - அதை
மோதல் செய்தோர் பலர்
யாதென உரைத்தும்
காதல் யாதென என்னறிவுக்குப் புலப்படவில்லை..!
பெண்ணே! நீ வந்தபின்னே -
தாயைச் சிறு கன்று தானாய் அறிவது போல்
பாயும் காதல் அதை அறிந்தேன்,
மாயம் போல்.. யாரும் சொல்லித் தராமலேயே!
Siddaarthhttp://www.blogger.com/profile/09489361679848572319noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7523704203526636500.post-77178338794689049732014-10-29T19:19:00.001-07:002014-10-29T19:29:46.800-07:00வல்லயிலை வரையேவு மலர்மார்பா!
தந்தனன தனதான தந்தனன தனதான
தந்தனன தனதான ..... தனதான
மண்பரவு முயிர்யாதும் விண்ணுரையு மமரோரும்
துன்பமிக வுறுமாறு கொடிதான
மன்னலுற முடியாத வஞ்சினமு மிகவான
செய்துறையு மவுணோரும் பொடியாக
கண்ணனலி னருளோடு திங்களணி யிறையோனும்
தந்தருளிக் கயலாடு நிலையோடு
கண்டதொரு மலர்போல செங்குவளை முகமாறு
கொண்டசிறு சுனைதோன்று மிளையோனே|
தண்திரையற் தனலாகத் திண்மணலும் அனலாகத்
தென்வளியும் தணியாத புயலாகத்
தொன்வெளியுங் கனலாகத் தங்கநிற முகமாறும்
செஞ்சுடரின் நிறமாகிச் சினமேகி
வண்டுமுரல் மலர்மார்பு வந்தணையு மொளிவீசு
வல்லயிலை விரைவோடு வரையேவி
வந்தமரர் சிறைமீள வல்லவுணர் கிளைவீழ
செந்தினகர் நிலையான பெருமாளே!
Siddaarthhttp://www.blogger.com/profile/09489361679848572319noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7523704203526636500.post-24731945439770111912014-10-29T01:04:00.003-07:002014-10-29T01:04:50.335-07:00தகைத்தவர் கொம்பினோடு உறைவோனே!
தனத்தனந் தந்த தான
தனத்தனந் தந்த தான
தனத்தனந் தந்த தான ..... தனதான
விளித்திடுங் தொண்டர் காண
விருப்புடன் எந்த நாளும்
விரைந்திடும் மஞ்ஞை யோடு வருவோனே!
விளங்குமவ் வெற்பு மோதிப்
பிளந்திடும் வெற்றி வேலும்
திளைத்திடும் அன்பு நாளும் உடையோனே!
அளித்தொடுங் கொன்றை யோடு
அனிச்சமும் வஞ்சி யாம்பல்
அணித்துறும் செம்மல் சேட லதனோடு
அடம்புசெவ் வல்லி யாரல்
கடம்புவெண் தும்பை தோன்றி
மடம்நிறைந் திட்ட ஞாழல் மடற்தாழை
களித்திடுஞ் செம்மல் சேடல்
கரந்தையும் புன்னை பீரம்
கவர்நிறப் பிண்டி வாகை யிருள்நாறி
குறிஞ்சியுங் கண்ணி யோடு
குருந்தமுந் தில்லை கோடல்
செருந்தியுஞ் செம்மல் சேடல் உடனான
தளிர்க்கரங் கொண்டு லாவு
தகைத்தவர் கொம்பி னோடு
திருப்பரங் குன்று லாவு முருகோனே!
தனிப்பெருந் தெய்வ மாகித்
தமர்க்குறுந் துன்ப மாற்று
திருப்பரங் குன்று வாழும் பெருமாளே!
Siddaarthhttp://www.blogger.com/profile/09489361679848572319noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7523704203526636500.post-56933133620711826532014-10-27T22:51:00.000-07:002014-10-27T22:51:40.113-07:00ஆர் அறிவு என்றிருந்து வடிவோனே!
தானதன தந்த தந்த தானதன தந்த தந்த
தானதன தந்த தந்த ...... தனதான
வானவரும் பெற்றதந்த மாதுதனைக் கைப்பிடிக்க
வாதையரின் கொற்றொடித்த மயில்வீரா!
வாகைமலர் கொண்டுவந்து சூடுஎனத் தந்ததந்த
வேலுடைய கைதிறந்து அருள்வோனே!
கானமுடை வெற்புறைந்த கோதைகுறத் திக்குகந்த
காதல்தர வந்திறங்கி யணைவோனே!
காவலுடை நெஞ்சகத்து வாயிலது கண்டிடித்துக்
காணறிவு தந்துணர்த்தி யுறைவோனே!
ஆனபல வையகத்து மாயையது பெற்றெடுத்த
ஆருருவம் எங்குமங்கு அழகாக
ஆவலிரு ஐந்துணர்ந்த ஆர்புலனெங் கும்வழிந்த
ஆர்அறிவு என்றிருந்து வடிவோனே!
மானவரின் உள்ளுறுத்து மாயையது கண்டிருக்கு
மாருயிரின் உள்ளிருந்து இயல்வோனே!
மாவின்கனிக் கென்றுவந்து ஆவின்குடி யங்கமர்ந்து
மாபழநி வெற்புறைந்த பெருமாளே!
Siddaarthhttp://www.blogger.com/profile/09489361679848572319noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7523704203526636500.post-15087774585602287272014-10-26T22:46:00.000-07:002014-10-26T22:46:14.409-07:00குறக் கோதை உறைமார்பா!
தனதன தான தனதன தான
தனதன தான ...... தனதான
அழகுரு வாகப் பரவிடு தோகை
அருகினி லாடு மயிலோனே!
அணியொடு தோன்று கரமிரு ஆறு
அருள்தரு வீர அயிலோனே!
தழையொடு பூத்த நறுமலர் யாவும்
திரள்தரு கோவை யணிமார்பா!
திணையொடு பூத்த புனமது காத்த
திகழ்குறக் கோதை யுறைமார்பா!
பழமென ஞான மொழியறி வாயப்
புரமெரி யூட்டு இறையோனும்
பரவிய பாரின் உயிரது யாவும்
பிறப்புற நாளு மறையோதும்
கிழவனுங் கேட்கக் கனியுள மேகிக்
குழவியு மாகிப் பொருளோதிக்
கழனியு ளாக வுயர்திரு வேர
கமமரு வானர் பெருமாளே!
Siddaarthhttp://www.blogger.com/profile/09489361679848572319noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7523704203526636500.post-35773000391001141562014-10-25T23:30:00.000-07:002014-10-25T23:33:53.723-07:00மலையுறை முருகோனே!
தனதன தனதன ..... தனதான
பனியுறை இறையவர் மகவோனே!
பகையவர் குடிகெடு மயிலோனே!
இனியன அறம்பகர் இளையோனே!
இமையவர் தொழுதிடும் இறையோனே!
தனியொரு நிகரறு தலைவோனே!
தமிழொடு மலையுறை முருகோனே!
கனிமுதிர் மரமிக அடர்சோலை
அழகுற அமர்ந்தருள் பெருமாளே!
Siddaarthhttp://www.blogger.com/profile/09489361679848572319noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7523704203526636500.post-45404152921395755072014-10-24T23:13:00.000-07:002014-10-25T23:32:24.252-07:00தமிழொடு மேவு பெருமாளே!
தனதன தான தனதன தான
தனதன தான ..... தனதான
அணியுடை ஆறு முகமொளி வீச
அகன்றிடு மார்பில் அழகான
அருமலரோடு தழுவிடு வேலும்
அமர்கரம் ஆடு மயிலோடு
மணியுடை தாளும் அடிகமழ் போதும்
அருள்தர நாளு மகிழ்வோடு
மதிமுகம் காணின் விழியுற நானும்
பொருளது வேறு விழைவேனோ!
பணியென நாளு முனைமற வாத
பலரொடு பாதம் நினையோரும்
பெரும் பொருளோடு வளர் அறிவோடும்
மகிழ்வொடு வாழ அருள்வோனே!
தணிமலை மீது அவுணரை வீழ்த்த
அனலது தீர அழகாக
தளிரென வாழு குறமக ளோடு
தமிழொடு மேவு பெருமாளே!
Siddaarthhttp://www.blogger.com/profile/09489361679848572319noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7523704203526636500.post-9989374386798510972013-06-01T19:31:00.000-07:002013-06-01T19:31:32.227-07:00பொய்பகர் கண்கள்
கண்பட் டவரொடு கனலுமிழ் விழிகள்
கண்டவர் காதலும் பகராது சென்றபின்
கண்படு காடிகை காரார்ந் தனவே!
கண்ணே பொய்பகர் கண்ணே!
பண்படு நெஞ்சொடு மெய்பயி லாமோ?
(பாவகை: நேரிசை ஆசிரியப்பா)
அவர்பால்,
அனல் உமிழ்ந்தன
என் கண்கள்!
காதல் பகராது
கடந்து அவர் சென்றபின் - என்
கார்மேகக் கண்மை
கடும் மழை பொழிவதேனோ?
உண்மையை உள்வைக்கும் நெஞ்சே!
கண்ணிமைக்கும் கற்பித்துத் தருவாயோ?
காதலில் மெய்பகர ..
Siddaarthhttp://www.blogger.com/profile/09489361679848572319noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7523704203526636500.post-46308385431716079232013-05-04T00:03:00.000-07:002013-05-04T00:04:48.236-07:00உள்ளம் ஆளும் பெருமாளே!
தய்யதன தான தய்யதன தான
தய்யதன தானத் ...... தனதான
மெய்யறிவு காணப் பெய்யளவி லாத
மெய்யருளைத் தாராய் முருகோனே!
மண்பதியும் ஆலின் மெல்லிலையின் மீதில்
வந்துதியு மாலின் மருகோனே!
கையிலுள வேலைப் பொய்கயவர் ஆவி
கொய்தெறிய வீசும் பெருமாளே!
கொங்குமலர்க் காடு கண்டகுறக் கோதை
கண்ணினிய காதற் தலைவோனே!
மையலிலே நானுந் துஞ்சியது போதும்
வையகமு வாழக் கனிவாயே!
பொன்மணிகள் வீசு மென்சுடரைப் போல
மின்னுமுகம் காணக் கடவேனோ!
உய்யுகிற வாழ்வு உந்தனடிக் கீழே
என்றுமுறத் தாளும் அருள்வாயே!
உள்ளமெனுக் கூறும் கல்லளையில் நாளும்
உள்ளிருந்து ஆளும் பெருமாளே!
Siddaarthhttp://www.blogger.com/profile/09489361679848572319noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7523704203526636500.post-89030637529502479032013-02-16T01:22:00.000-08:002013-02-16T01:22:05.735-08:00காதல்
காவற் துணையென எண்ணும் நெஞ்சோ
கானல் மலரெனத் தோன்றும் உவப்போ
காதற் துணையோ கனிவோ
காதல் யாதெனும் இனிதின் இனிதே!
(பாவகை: நேரிசை ஆசிரியப்பா)
காதல் என்பது யாது? ஒரு துணையே காவல் என எண்ணும் நெஞ்சமோ? அந்த நெஞ்சத்தில் பாலையில் பூத்த மலர் போலத் தோன்றும் மகிழ்ச்சியோ? காதல் செய்யும் துணையோடு இருப்பதுதான் காதலோ? கனிந்த (பண்பட்ட) அன்புதான் காதலோ? எதுவாயினும், காதல் இனியவை அனைத்தினும் இனியது!
Siddaarthhttp://www.blogger.com/profile/09489361679848572319noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7523704203526636500.post-73693438832190133332013-02-06T00:08:00.001-08:002014-10-27T21:01:38.829-07:00மயிலுடை இனியோனே!
தனன தனதன தனதன தனதன
தனன தனதன தனதன தனதன
தனன தனதன தனதன தனதன தனதான
விழியு பிரிதுண ரழகிய உலகமு
வதியு மிருசெவி யுறுமரு இசைகளு
மதியு மறிகிற தொடுசுவை மணமெனும் புலன்யாவும்
பதியு மறிகெடு முதுகிழ வயதுறும்
விதியி னழலினை யறிவொடு விலகியுன்
மதியி னறுமுக முனதரு கழலினை யடைவேனோ!
கழையின் துளைதொடு குழலெழு மிசைதனில்
கனிய விழியவர் மயலொடு அசைவறக்
கடவு மரியவ னெடியவன் தருபுகழ் மருகோனே!
கதிரி னொளிமிக வெளியிடும் அயிலொடு
கதறு சிறைபடு மமரரும் விடுபடக்
கடிது அவர்படு துயரமும் பொடிபட அருளாலே
சுழலு திரைதழு விடுகட லதனொடு
சொலரு நகருடை யவுணரை யடியொடு
சிதைய வருளொரு சினமுடை யறுமுக முடையோனே!
செறிவு முகைதொடு மடலையர் அறுவரும்
சினைய கயலுறை யுகுவளை மலரெழு
சுடரை சுடலுறை யிறைவனின் மகவினை யணைவாக
மழலை முழுதுற முகமெழு மெழிலுற
மலரு மரைவிழி யொடுதமி ழுறவளர்
மிளிரு மழகிய மரகத மயிலுடை யினியோனே!
மருளு மிருவிழி மகிழ்குற மடலொடு
மனையு மெனவரு மமரரின் மகளொடு
முரலு மளினிறை முதிர்பழ மலையமர் பெருமாளே!
Siddaarthhttp://www.blogger.com/profile/09489361679848572319noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7523704203526636500.post-37798003753523329782013-01-13T22:51:00.000-08:002013-01-14T14:24:50.696-08:00பொங்கல் பொங்குக!
தும்பிக் குருளை கள்ளிற் திளைத்துத்
தும்பைப் பூவோ டூடித் திரியும்
இன்பத் தவரோ டூடிக் கூடி
அன்பும் அறனும் வளனுங் கொள்ளென்
றுதிளை நெஞ்சம் போலப்
புதுனெற் பொங்கற் பொங்குக பொங்குக!
(பாவகை: நேரிசை ஆசிரியப்பா)
தலைவி கூறுகிறாள்: தேனருந்தித் தும்பைப் பூவோடு சண்டையிட்டுத் திரியும் தும்பிப் பார்ப்பு போல் நானும் என் தலைவரோடு ஊடியும் பின் கூடியும் இருப்பேன். அவ்வாறு இருந்து அன்பும் அறமும் வளமும் கொண்டு இன்பத்தில் பொங்கித் திளைக்கும் என் நெஞ்சம் போல் புது நெல் பொங்கல் பொங்கட்டும்!
Siddaarthhttp://www.blogger.com/profile/09489361679848572319noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7523704203526636500.post-39262469416295573622012-12-26T13:55:00.002-08:002012-12-26T13:55:57.241-08:00மான் ஈந்த மாது அணிமார்பா!
தனன தாத்தன தனன தாத்தன
தானா தானா தானா தானா ...... தனதான
முயலு மான்மறி குலவு வேந்துடை
மாடோ மானோ மானீ மாதோ அணிமார்பா!
மலரு மீன்புரை மணியு மார்கழல்
தாளா தோளா வேளா ஆளா யெனவோதக்
கயமுங் காத்திடு கனிய நோக்கொடு
காணா யூணா யூடா யூனா யுறைவோனே!
கரிய தீங்கிடு கொடிய கேட்டவர்க்
காலா மேலா நீலா வேலா உனதாளைத்
துயல வேண்டிட நினையு மாந்தரைச்
சேராய் வாராய் தாராய் பாரா யருட்பார்வை!
தயித தாம்மென தயித தாம்மென
தாதா தாதா தாதா தாதா எனஆடு
மயிலு னீண்டிடு மயிலு மேந்திய
மாயா சேயா ஓயாத் தேயாப் புகழோனே!
மலையு வான்தொடு நிலையு மாண்டிடு
பேரா ரூரா ஏரா வாரூர்ப் பெருமாளே!
Siddaarthhttp://www.blogger.com/profile/09489361679848572319noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7523704203526636500.post-37698316413527078312012-12-25T11:09:00.000-08:002012-12-25T11:09:33.949-08:00அருளும் பெருமாளே!
தனன தனன தனன தனன
தனன தனன தனதான
எனது உளமு மருளி நிறையும்
எழிலி னழகு முருகோனே!
எளிய பிறவி முழுது முனது
அடியி லருளு மினியோனே!
நினது நினைவி லுறையுங் குறவர்
நிலவைப் பரவி யணைவோனே!
நிலனை யடியில் பணிய நினையு
மவுணர் குடியைக் களைவோனே!
கனலி லுலகி லுழலு முயிரைக்
கசியும் பரிவின் திரளான
கடலில் திளைய அறிவு பகருங்
கடம்பம் அணியும் அழகோனே!
புனலு மணியு மிறைவ னரிய
பதமும் பணியும் அறிவாளா!
கழலுங் கரிய விழியின் சுடருங்
கரமும் அருளும் பெருமாளே!
Siddaarthhttp://www.blogger.com/profile/09489361679848572319noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7523704203526636500.post-21055276237434304332012-12-19T09:49:00.000-08:002012-12-19T09:49:11.619-08:00தமிழும் அள்ளித் தருவோனே..
தனதனன தனன தந்தத் ...... தனதான
தலைவனுமெந் தமிழு மள்ளித் தருவோனே!
நிலைவழியு மொழியு மென்றும் பொழிவோனே!
மலையுருவ மரமு மிட்டுத் திரிவோனை
அலையுயர அயிலு மிட்டுப் பிளந்தோனே!
புனமெதிலு முயரு குன்றப் பெருவாழ்வே!
உனதருமை யழகு நித்தம் மறவாத
அகமுழுது நிறையு மன்பைத் தருவாயே!
முகைமலரு முகமு மேந்தும் பெருமாளே!
Siddaarthhttp://www.blogger.com/profile/09489361679848572319noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7523704203526636500.post-78592655523573702962012-12-14T09:57:00.000-08:002012-12-14T10:01:07.907-08:00ஊடல்
ஊடல் உடைத்தே செஞ்சொற் சிதைய
ஊறல் உடைத்தேன் சுனைநிகர் விழியேன்
ஊதல் உடைத்துளை வேயார் நெஞ்சம்
ஊசல் உடைத்தே யவர்பால்
ஊடல் உடைத்தும் உளம் மாறிலனே!
(பாவகை: நேரிசை ஆசிரியப்பா)
நல்ல சொற்கள் சிதைந்து உண்டான ஊடலின் பின்னும், தேன் போன்ற சுவையுடைய நீர் ஊறும் சுனையினை ஒத்த கண்களை உடைய எனது நெஞ்சம், காற்று ஊதும் துளைகளை உடைய மூங்கிற் குச்சி போல், ஊஞ்சல் போல், அவர்பால் செல்ல இன்னும் மாறாமல் தவிக்கிறது.
Siddaarthhttp://www.blogger.com/profile/09489361679848572319noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7523704203526636500.post-91795169408550499842012-12-13T16:16:00.000-08:002012-12-24T01:01:01.644-08:00அகலின் ஒளியதில்..
தனன தனதன தத்தன தத்தன
தனன தனதன தத்தன தத்தன
தனன தனதன தத்தன தத்தன தனதான
அகலின் ஒளியதில் வன்முரல் வண்டினை
நிகரும் எனதரு நெஞ்சமும் உன்றனைப்
பகலொ டிரவிலு வந்தனை செய்திடும் முருகோனே!
கனியின் சிறுவிளை யாட்டுமு டிந்ததும்
மயிலின் சிறகெழத் தென்னகம் வந்துடை
ஒயிலும் துறந்திரு கற்பழ னிக்கமர் மலையோனே!
மறமொ டயிலது விட்டது யர்ந்திடப்
புறமொ டவுணரின் கொட்டம யர்ந்திட
உறவொ டமரரின் வஞ்சிம ணந்திடு மிறையோனே!
சுரமும் சுனைநிறை வெற்பிலி யன்றிடுந்
தெரிவை களவும ணம்புரி யும்உனைக்
குறவர் குலமது வந்துவ ணங்கிடும் அழகோனே!
உழலும் புவியதின் வந்தவர் வெந்ததும்
அழிய அமைவுறு ஆண்டவர் கண்ணெரி
அழலில் அழகொடு தோன்றிய பன்னிரு விழியோனே!
அரிய சிறுவரும் அப்பரொ டுப்பொரு
தரிய சிரமறு பட்டது பெற்றிடு
பெரிய களபக ரத்துமு கத்தவர்க் கிளையோனே!
சிதறு மகமது ஒன்றிட உந்தனின்
பதமும் தொழுதிடக் குன்றிய தொண்றிய
தறியு மறிவினை என்றனில் உந்திட வருள்வாயே!
விழுமி யடியினில் கொட்டிய பூக்களும்
செழிய நிறமிக நின்றிடு தோற்றமும்
விழியி னொளியொடு பார்த்தறி வூட்டிய பெருமாளே!
Siddaarthhttp://www.blogger.com/profile/09489361679848572319noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-7523704203526636500.post-10285696368763504772012-11-30T08:55:00.001-08:002012-11-30T08:55:52.268-08:00ஈண்டும் இனிதாய் ..
திங்கள் கண்டு புலம்பல் உறத்தேன்
திங்கள் கண்டு கொள்ளென வந்தவள்
திங்கள் கண்டது பன்னிரண் டோடியுந்
திங்கள் கண்டுந் திங்கள் கண்டுந்
திங்கள் கண்டகண் ணயர்வி லுறுமோ
திங்கள் கண்டீண் டுமினிது
திங்கள் கண்டுபல வாழ்வோம் வாழ்வோம்!
(பாவகை: நேரிசை ஆசிரியப்பா)
நிலவினைக் கண்டு புலம்பியபோது, உடன் கைப்பற்ற வந்தவளோடு ஓராண்டு வாழ்ந்தும், மாதங்கள் பல நிலவினைக் கண்டும் தெவிட்டாதது போல், இன்றும் இனிதாயுளது. இதுபோல் இன்னும் பலகாலம் இனிதே வாழ்வோம்.
Siddaarthhttp://www.blogger.com/profile/09489361679848572319noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7523704203526636500.post-56915962274821711072012-06-07T00:04:00.000-07:002012-06-07T00:06:17.727-07:00காப்பு
மறக்களத் தடினுந் தமர்கைச் சுடினும்
உறுமோர் அணியன் இம்மைப் பெறினே
மறுமை காக்கும் அறம்போல்
திறந்தோட் திணிவொடு எஃகாத் தற்றே!
(பாவகை: நேரிசை ஆசிரியப்பா)
எத்துன்பம் வரினும், உடன் பிறந்த இளையவன் ஒருவன் இப்பிறப்பில் இருப்பானாயின், மறுபிறப்பில் காக்கும் அறம் போன்றதும், எஃகால் ஆன காப்பினைப் போன்றதும் ஆகும்.
Siddaarthhttp://www.blogger.com/profile/09489361679848572319noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7523704203526636500.post-30538424227888239822012-04-24T00:00:00.001-07:002012-06-14T15:46:11.412-07:00புலால்
புலாஅல் புசித்தாய் புறம்படல் உடைத்தே
செலாது வந்த கேடது கழிய
உலாவு நீரின் தலைத்தாள் நனைக்க
நிலாது செல்லென உரைத்தனை! செய்தும்
விலாவின் ஊடே பாய்ந்த ஊன்தனில்
அளாவி ஆங்கே கலந்த
புலாலும் உண்டே யானென் செய்வேன்!
(பாவகை: நேரிசை ஆசிரியப்பா)
புலால் உண்டதால் உள்ளே வரற்கியலாது, தலையோடு நீராடி வா எனச் சொன்னாய். நீராடி வந்தபின்னும், என் தசைகளில் நானுண்ட புலால் கலந்துள்ளதே! அதை நான் என்ன செய்வேன்?
Siddaarthhttp://www.blogger.com/profile/09489361679848572319noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7523704203526636500.post-52199645708054602882011-10-09T01:13:00.000-07:002012-04-24T00:02:28.051-07:00அரிது
யான்,
உற்றதின் கற்றதின் படைத்ததின் அரிது
காட்சியின் எழிலும் நாணும் மடனும்
மாட்சியும் தெளிவும் அறிவும் செறிந்த
நெடுங்கயற் கண்ணுடை அரிவை
தொடுகோடிக் காந்தட் கரம்பிடிப் பதுவே!
(பாவகை: நேரிசை ஆசிரியப்பா)
பிறப்பினால் வந்ததினும், கற்ற கல்வியினும், ஈட்டிய செல்வத்தினும் சிறப்பு மிக்கது யாதெனின், அழகும் அறிவும் மிகுந்த பெண்ணினை வாழ்க்கைத் துணையாகக் கொள்வதே ஆகும்!
Siddaarthhttp://www.blogger.com/profile/09489361679848572319noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7523704203526636500.post-37991544201746531462011-09-23T01:27:00.000-07:002011-10-13T02:18:44.953-07:00பற்று
தமியோன் புலம்பும் புன்கண் மாலை
முல்லை இணரொடு எள்ளல் இல்லை!
முல்லை நீவிர் அடைதற் கேங்குமோர்
ஆம்பற் கார்குழல் அரிவை
காந்தட் கரம்யான் பற்றுத லாலே!
(பாவகை: நேரிசை ஆசிரியப்பா)
நான் தனியே மாலையில் புலம்பிய போது, முல்லை மலர்கள் தம் கூட்டத்தோடு என்னை நோக்கி நகைத்தன. அவை அடைவதற்கு ஏங்கும் கருங்கூந்தலுடைய பெண்ணின் காந்தட் கரங்களை நான் பற்றுவதால், அவை என்னை நோக்கி இனி நகைக்க முடியாது!
Siddaarthhttp://www.blogger.com/profile/09489361679848572319noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7523704203526636500.post-74998492876742721422011-09-17T21:38:00.000-07:002011-10-13T02:19:38.363-07:00பயன்
மலரிதழொடு மலர்மணமும்
மலர்மணந்தரு மகிழ்நிலையும்
மகிழ்நிலைதரும் எழிலழகும்
மகிழ்அழகுடை மதிமுகமும்
முறுவலும்
வளைக்கரம் அவர்பற்று நாளன்றித்
தருபயனும் உண்டோ? சொல்லென் தோழீ ..
(பாவகை: குறளடி வஞ்சிப்பா)
செந்தமிழ் படிக்கத் தெரியாது உனக்கென
மௌனக்கவிதை நான் வரைந்தேன்!
மௌனம் புரியா மடந்தை எந்தன்
காதல் கேட்க நீ துடித்தாய்.
நான் காதல் சொல்லும் வார்த்தை கேட்டுச்
சொட்டுச் சிரிப்பை நீ நகைத்தாய்.
ஓரப்புன்னகை ஒழிந்தே வந்ததால்
வெட்கப்பட்டு நான் சிரித்தேன்!
உன் குட்டைக் கூந்தலின் பின்னலின் பின்னே
ஒட்டிக் கிடக்க ஓர் பூக்கொடுத்தேன்.
உன் நெட்டை மூக்கின் முன்னே முகர்ந்து அதைப்
பட்டைப் பையினில் நீ விடுத்தாய்!
உன் வீட்டு வாசலின் ஸ்டிக்கர் கோலத்தை
எட்டிப் பார்த்து நான் ரசித்தேன்.
உன் கட்டை விரலின் மிளிரும் மையுடன்
வெற்றுத் தரையில் கோலமிட்டாய்!
உன் வெட்டிப் பேச்சின் எண்ணம் மேல்வரச்
சிட்டுக்குருவியாய்ப் பசித்திருந்தேன்.
என் வெட்டுப் பார்வையை நினைத்துச் சிரித்துக்
கட்டிச் சோற்றினை நீ புசித்தாய் ..
உன் மயக்கும் பார்வை மையலில் நான்
தூக்கம் இன்றித் துடித்திருந்தேன்.
என் நினைவுக் கனவு வருமெனக் கண்டு
இரவும் பகலும் உறக்கம் கொண்டாய்.
நாகரிகத்தில் வளர்ந்ததனால் உன்
நாணம் போக நேர்ந்ததடீ ..
நாட்டுப்புறமாய் நானிருந்தும் நம்
நெஞ்சம் ஒன்று சேர்ந்ததடீ ..Siddaarthhttp://www.blogger.com/profile/09489361679848572319noreply@blogger.com2